

இன்றும் இந்தியா சிதறிக் கிடப்பதுதான் தீவிரவாதிகளின் சாதகமான விஷயம். இப்போதைய தேவை ஒரு சுதந்திரப்போராட்டத்துக்கான ஒற்றுமை, உறுதி. ஆனால் அதை வழிநடத்திச்செல்லக்கூடிய தலைவன் யார்?
பிரதமர் பதவியோடு பல பதவிகளை வகித்த வி.பி.சிங் பெயர் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டிலும், குதிரை பேரத்திலும், ஆட்சி கவிழ்ப்பிலும், தரமற்ற அரசியலிலும் இடம் பெற்றதில்லை. பிராந்திய அடையாளங்கள் இல்லாமல், மத-இன உணர்வுகள் இல்லாமல், இந்தியாவை ஒரு தேசிய கண்ணோட்டத்தில் பார்த்த பிரதமர்களில் வி.பி.சிங் ஒருவர்.
உ.பி முதலமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட நாட்களுக்குள் சாம்பல் கொள்ளையர்களை அடக்குவேன் என்று சபதமிட்டு அது நடக்காமல் போனதும் பதவியை துறந்தவர்..!
காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ராணுவ அமைச்சராக இருந்தபோதும் fairfax, bofors முறையீடுகளை எந்தவொரு சமாதானத்திற்கும் இடம்கொடுக்காமல் வெளியுலகத்துக்கு கொண்டு வந்தவர்..! காங்கிரஸ் ஆட்சிக்கு நிதிஉதவி செய்துவந்த அம்பானி அமிதாப் போன்றவர்களிடம் வருமானவரி சோதனை நடத்திய நடுநிலையாளர்..!
பிரசார் பாரதி அறிக்கை முலம் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கைக்கு விதை ஊன்றியவர்..!
இரு துருவங்களான கம்யூனிஸ்டுகளையும் ப.ஜா.காவையும் ஒரே அலைவரிசையில் இணைத்த சாதனையாளர். அதே சமயம், கூடவந்தவர்களின் கூட்டணி அரசியலையும், காங்கிரஸின் காலைவாரும் அரசியலையும், பா.ஜா.காவின் காவி அரசியலையும் தாக்குப்பிடிக்கமுடியாமல் தோற்றுப் போனவர்..! சந்திரசேகர் - ராஜீவ் காந்தி - அத்வானியின் மும்முனைத் தாக்குதலில் வீழ்ந்து போனவர்.
காங்கிரஸிலேயே நீடித்திருந்தால், ராஜீவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக, நரசிம்மராவுக்கு பதிலாக பிரதமராகியிருக்கக் கூடியவர்..!
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உண்மையிலேயே கவலைப்பட்டவர்..!
தன் உடலில் புற்று நோய் தொடங்கியதை அறிந்தவுடன் அரசியலைத் துறந்தவர். கிட்டத்தட்ட பதினேழு வருடமாக புற்று நோயுடன் போராடிய தன்னம்பிகையாளர்..!
கடைசியாக, வாரிசு அரசியலில் நம்பிக்கையில்லாத சொற்ப இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர்..!
விஸ்வநாத் பிரதாப் சிங் இந்திய ஜனநாயகத்தின் இலக்கணங்களுக்கு ஏற்ற அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் இந்திய ஜனநாயகத்தைப்போலவே பலர் இவரை சரியாக புரிந்துகொள்ளவில்லை.
இது எங்கோ தெருவோரத்தில் நடந்தது அல்ல. வங்கி தொடர்பான ஒரு சர்வதேச கண்காட்சியில், பல நாட்டவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் இந்தப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது போல காட்சியை மும்பை நரிமன் பாயிண்ட்டில் உள்ள ஷூ பாலிஷ் சிறுவர்களாக பார்த்துப் பழகிய நமக்கு அமெரிக்காவில் இப்படி நடப்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
இதை ஒரு 'சேவை' என்று தொழில் ரீதியாக அங்கீகரித்தாலும் ஒரு கறுப்பினத்தவனுக்கு வெள்ளையன் இதுபோல பாத சேவை செய்யும் காட்சி அமெரிக்காவில் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே..!
ஒபாமா... உண்மையான 'மாற்றத்தை' காண்போமா?
சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த இந்த வன்முறை தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் வெளிவந்ததால் பரபரப்பானது. இவர்கள்தான் வருங்காலத்தில் சட்டத்தை மேம்படுத்தும் வக்கீல்களாகவும்
நீதியை நிலை நாட்டும் நீதிபதிகளாகவும் வலம் வரப்போகிறவர்கள்..! சட்டத்தை கையில் எடுக்கும் இவர்களை நம்பித்தான் நாம் சட்டத்தை ஒப்படைக்கப்போகிறோம்..
கொஞ்சம்கூட மனிதத்தன்மையே இல்லாத மிருககுணம் இந்த மாணவர்களுக்கு எங்கிருந்து வந்தது? சினிமாவின் பாதிப்பா அல்லது அரசியலின் பாதிப்பா?
ஆனால் நமக்கு இதெல்லாம் நகைச்சுவை காட்சிகள்தானே? திரையில் கவுண்டமணி செந்திலைப் போட்டு அடிக்கும்போதும் வடிவேலு தர்ம அடி வாங்கும்போதும் குடும்பத்தோடு பார்த்து கைதட்டி ரசித்தவர்கள்தானே நாம்..! இதையும் ரசித்துவிட்டுப்போவோமே..!
ஆனால் இந்த மாறுதல் அமெரிக்காவில் நிகழ 200 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. கீழை நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்களின் வேகம்கூட அமெரிக்காவில் இல்லை.
இங்குஒரு தலித் முதல்வராகியிருக்கிறார்..
ஒரு பெண் முஸ்லீம் நாட்டை ஆண்டிருக்கிறார்..
தெற்காசிய நாடுகள் பல பெண் அதிபர்களை, போராளிகளை சந்தித்திருக்கிறது..
வெற்றி பெற்றவுடன் ஒபாமா சொல்லியிருக்கிறார்: "அமெரிக்கா எந்த மாற்றத்தையும் எதிர்கொளும் என்பதில் சந்தேகம் இருப்பவர்களுக்கு இதுதான் விடை...!"
இன்னும் சந்தேகம் இருக்கிறது ஒபாமா... அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண் ஜனாதிபதியகவில்லை...!