இப்போது தமிழக அரசு புதிதாக அம்மா குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏழைகளுக்கு இலவசமாக 20 லிட்டர் மினரல் வாட்டர் அளிக்கப்படுமாம். பணக்காரர்கள் எல்லாம் சுலபமாக காசு கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி விடுகிறார்களாம், அதனால் ஏழைக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கிறதாம் அரசு.
மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. அதற்க்குதான் இந்த அரசாங்கம், குடிநீர் வாரியம், மாநகராட்சி எல்லாம் இருக்கிறது. பணக்காரனாய் இருக்கட்டும் ஏழையாக இருக்கட்டும்... குடிநீர் என்பது மக்களின் அத்தியாவசிய தேவை. அதை சீரான முறையில் விநியோகிக்க லாயக்கில்லாத அரசு அதை பாட்டில்களில் அடைத்து இலவசம் என்று விநியோகிக்கிறது, அதுவும் ஸ்மார்ட் கார்டு மூலமாக... வெட்கக்கேடு...!
வீராணம் திட்டம் என்னவாயிற்று? கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் என்னவாயிற்று? இவையெல்லாம் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று அரசாங்கமே ஒத்துக்கொள்கிறது. மினரல் வாட்டர் கொடுப்பதன் மூலம் மாநகராட்சி குடிநீர் குடிப்பதற்கு லாயக்கில்லாத தண்ணீர் என்று அரசே சொல்கிறது. சென்னையில் இவ்வளவு வெள்ளம் வந்தும் அதையெல்லாம் சேமிக்கக எங்களுக்கு தகுதியில்லை என்கிறது.
அடுத்த அம்மா திட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்றே தெரியவில்லை... உங்களது சுவாசமே 'அம்மா'வாக இருக்க வேண்டும் என்று 'இலவச காற்று' திட்டம் எதாவது அறிவிப்பார்களோ?
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்