அண்மையில் நான் படித்த புத்தகம் சத்குரு ஜக்கி வாசுதேவின் 'கேளுங்கள்... கொடுக்கப்படும்'... சத்குருவின் கேள்வி-பதில் தொகுப்பு.. அதில் ஒரு கேள்வி-பதில்.. தலையில் பொளேர் என்று அடித்தாற்போல இருந்தது .
கேள்வி: திருவண்ணாமலையில் ஒரு யோகி ஆசனத்தில் அண்ணாந்து பார்த்து அமர்ந்தபடி அப்படியே காற்றில் எழுவதை இணையதளத்தில் பார்த்தேன். என் கண்களையே நம்பமுடியவில்லை.. இது சாத்தியமா?
பதில்: சாத்தியம்தான். அனால் உண்மையான் யோகிகள் இந்த சர்க்கஸ் வேலைகள் செய்துகாட்டிக்கொண்டு இருக்க மாட்டார்கள். வாழ்க்கை என்பதே மிக வியக்கத்தக்க அதிசயம். ஒரே மண்ணிலிருந்து ஒவ்வொரு விதையும் வெவ்வேறு மரமாக வெளிவருவது அதிசயம். உண்பதை உடலின் பகுதியாக மாற்றும் உயிரின் அமைப்பு அதிசயம். சேற்றில் செந்தாமரை பூப்பது அதிசயம்.. பூமி சுழல்வது அதிசயம்.
இத்தனை அதிசயங்களை செய்துகாட்டும் இயற்கை ஆர்ப்பாட்டமிலாமல் இருக்கிறது. இந்தப் பேரதிசயங்களின் ஆழத்தை உணரும் ஆர்வத்தை விட்டுவிட்டு, நீங்கள் என்ன அதிசயங்கள் செய்துகாட்ட விரும்புகிறீர்கள்?
இதுபோல ஏதோ கொஞ்சம் திறமையை வைத்துக்கொண்டு சித்து வேலையை காண்பிக்கும் யோகிகள் இயற்கையின் முன்னால் தோற்றுபோவார்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். கையிலிருந்து விபூதி வரவழிப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, அந்தரத்தில் மிதப்பதுபோல் தோற்றம் அளிப்பது.. இவையெல்லாம் என்ன பெரிய பிரமாதம்? ஒரு பூ மலர்வதை விடவும், பல மைல்கள் பறந்து வேடந்தாங்கலை அடையும் பறவைகளைவிடவும், மயிகளின் தோகை அழகை விடாவா இவையெல்லாம் அதிசயம்? நாம் ஏன் இயற்கையை மறந்து இதுபோல செயற்கை அதிசயங்களை ரசித்துக்கொண்டிருகிறோம்?
இயற்கையை விட்டுத்தள்ளுங்கள்.. மனிதன் தன் திறமையால் பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறான்.. கட்டிடக்கலை வளர்ச்சியடையாத காலத்தில் வெறும் பாறைகளை வைத்து கட்டப்பட்ட எதிப்திய பிரமிடுகள், காற்றின் ஒலியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இசை, ஒலியிலிருந்து முதிர்ந்த மொழி வடிவம்.. இவையெல்லாம் மனிதன் செய்துகாட்டிய அதிசயங்கள்.. இவற்றோடு ஆன்மிகம் சேரும்போதுதான் அது பிரச்சினையாகிறது.. கொல்கத்தா விக்டோரியா அரண்மனையை சில நிமிடங்கள் காணாமல்போகச்செய்த பி.சி.சர்க்காரை 'மாஜிக் நிபுணர்' என்று கூறும் நாம், சித்து விளையாட்டில் ஈடுபடுவோரை கடவுளோடு ஒப்பிடுகிறோம்..
என்ன செய்வது... கடவுள்தன்மை கொண்ட மனிதர்களை நம்புவதற்குக்கூட நமக்கு அதிசயங்கள் தேவைப்படுகிறது. நெல்லிக்கனியை தங்கமாகியவர் என்றும், உயிர்த்தெழுந்து வந்தவர் என்றும் சொன்னால்தானே நாம் ஆதிசங்கரரையும் ஏசுநாதரையும் ஏற்றுக்கொள்வோம்?
2 comments:
Sattai Adi !
right said... i too am admirer of sadguru
Post a Comment
உங்கள் கருத்துக்கள்