நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமின் புறநகர் பகுதி ஒன்றில் சொடுக்கிய புகைபடங்கள். ஆம்ஸ்டர்டாம் நகரின் எல்லைகளைத்தாண்டி போக்குவரத்து இல்லாத பிரதேசம் ஒன்றில் மிதமான குளிர் சூழ்ந்த ஒரு காலை பொழுதில் கண்ட காட்சிகள் இவை. கால்நடைகள் சுதந்திரமாக திரியும் வனர்ப்பு மிகுந்த புல்வெளி பரப்புகளின் ஊடே, சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டு காலை நடை பயிற்சி செய்தது ஒரு இனிய அனுபவம்.
கொழுத்த நெதர்லாந்து பசுக்களும் பருத்த செம்மறி ஆடுகளும் புல் மேய்ந்து கொண்டிருக்க, ஆங்காங்கே ஓடும் தெளிந்த நீரோடையில் வாத்துக்களும் அன்னங்களும் குதூகலத்துடன் நீந்திக்கொண்டிருக்க, மீன்கொதிப்பறவைகள் மரங்களுக்கும் ஓடைகளுக்கும் தாவிக்கொண்டிருக்க இந்த பகுதியில் அனுமதிக்கப்பட்ட ஒரே வாகனம் மிதிவண்டிதான்.