சென்னையில் எல்லா கடை பெயர்களும் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று உத்தரவு போட்டதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி என்னென்ன கடைகளை எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று யோசனையும் கூறியிருக்கிறது. தமிழ் பெயர் வைக்காதவர்களுக்கு லைசன்ஸ், மன்னிக்கவும்... உரிமம் ரத்து செய்யப்படுமாம்.
மாநகராட்சியின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. அதே சமயம் இதை ஏன் அரசு தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லவில்லை என்றும் புரியவில்லை..
சென்னை தெருக்கள் முழுவதும் இப்போது தமிழ் மணம் வீசுகிறது.. உதாரணத்துக்குச் சில...
மெடிகல்ஸ் - மருந்தகம்
கலர் லேப் - வண்ணக் கூடம்
செல் வேர்ல்ட் - அலைபேசி உலகம்
பியுட்டி பார்லர் - அழகூட்டு நிலையம்
ஸ்டேஷனரி - எழுது பொருளகம்
பேக்கிரி - அடுமனை அல்லது வெதுப்பகம்
ஆப்டிகல்ஸ் - கண்ணாடியகம்
பிசினஸ் சென்டர் - வர்த்தக நடுவகம்
ஸ்நாக்ஸ் - நொறுவைகள்
ஹார்ட்வேர் - வன்பொருளகம்
இருந்தாலும் ஒரு விஷயம் நெருடுகிறது.. கடைகளில் தமிழ்ப் பெயர் இல்லையென்றால் தண்டனை.. சினிமாவுக்கு தமிழ்ப் பெயர் வைத்தால் சலுகை..
என்ன நியாயம் இது? ஏன் இந்த பாரபட்சம்?
Saturday, August 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்