இது எங்கோ தெருவோரத்தில் நடந்தது அல்ல. வங்கி தொடர்பான ஒரு சர்வதேச கண்காட்சியில், பல நாட்டவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் இந்தப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது போல காட்சியை மும்பை நரிமன் பாயிண்ட்டில் உள்ள ஷூ பாலிஷ் சிறுவர்களாக பார்த்துப் பழகிய நமக்கு அமெரிக்காவில் இப்படி நடப்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
இதை ஒரு 'சேவை' என்று தொழில் ரீதியாக அங்கீகரித்தாலும் ஒரு கறுப்பினத்தவனுக்கு வெள்ளையன் இதுபோல பாத சேவை செய்யும் காட்சி அமெரிக்காவில் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே..!
ஒபாமா... உண்மையான 'மாற்றத்தை' காண்போமா?
2 comments:
அன்புள்ள ரவி,
தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்ரமாதித்தன் போல் போராடிய பின்புதான் என்னால் முதன் முறையாக இன்று blogspot வலைத்தளங்களுக்குப் பின்னூட்டம் இட முடிகிறது! ஏனென்றால் நான் ஒரு Tamilblogs (Wordpress) ஜாதி!
உங்கள் பழைய, புதிய மற்றும் புத்தம் புதிய இடுகைகள் அனைத்தும் படிக்கத் தூண்டுபவை; படித்த பின் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுபவை. புகைப்படங்களும் அலாதி!
தொடரட்டும் இவை.
நன்றி!
http://cinemavirumbi.tamilblogs.com/
சினிமா விரும்பி
Excellent article... Good Find! and Good Conclusion!
Post a Comment
உங்கள் கருத்துக்கள்