பரிதாப ஓட்டு...
பணத்துக்கு ஓட்டு...
சினிமா ஓட்டு...
சாதிக்கு ஓட்டு... கோப ஓட்டு...
கள்ள ஓட்டு..
இப்போது-
இலவச ஓட்டுரிமையை
இலவசங்களுக்கு விற்ற ஓட்டு..
பாரதத்தில் எப்போது விழும்
பகுத்தறிவு ஓட்டு?
தாஜ்மஹால் ஏன் உலக அதிசயம்? இதில் மூன்று விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.. இதன் அழகு, இதிலுள்ள அதிநுட்ப நுணுக்கம் மற்றும் இதன் நேர்த்தி.. இந்த மூன்றும் சேர்ந்துதான் இன்று தாஜ்மஹாலை உலகத்தின் சிறந்த கலைப்படைப்பாக விளங்க வைக்கிறது. தாஜ் அழகுபற்றி சொல்லவே வேண்டாம். இருபுறமும் உள்ள தோட்டங்களை ரசித்துவிட்டு தாஜ்மஹால் செல்வதற்கே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. தாஜ்மகாலில் ஒவ்வொன்றும் மிக நுட்பமாக அதி கவனத்துடன் அமைக்கப்பட்டிருகிறது. முதல் வாயிலைக்கடந்தவுடன் கொஞ்சம் சிறியதாக தெரியும், அனால் அருகே செல்ல செல்ல அதன் பிரமாண்டம் அதிகரிக்கும். பின் அந்த பளிங்கு மாளிகையின் படிகளில் ஏறினால் மேல்கூரைகூட தெரியாது. தாஜ்மஹாலை சுற்றியுள்ள நான்கு தூண்களும் சற்றே சாய்ந்து இருக்கும். ஏதாவது அசம்பாவிதம் நடந்து அந்த தூண்கள் விழுந்தாலும் தாஜ்மஹாலில் விழாது. தாஜ்மஹால் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உலோக தூண் பாரசீக மற்றும் இந்து குறியீடுகளை கொண்டது. முதலில் தங்கத்தினால் செய்யப்பட்ட இதை எடுத்துவிட்டு ஆங்கிலேயர்கள் பித்தளை தூணாக மாற்றினார்.
இந்த அதிஅற்புதமான கட்டிடதுக்குப்பின் 22000 பணியாளர்களின் 20 வருட உழைப்பு இருக்கிறது, உலகின் தலை சிறந்த நிபுணர்களின் கைவண்ணம் இருக்கிறது. மேலும் இதன் பணிகளுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் யானைகள் உபயோகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அந்த காலத்திலேயே 3.5 கோடி ருபாய் செலவு பிடித்தது (அப்போது சுப்ரீம் கோர்ட் எல்லாம் இல்லை.. யாரும் பொதுநலவழக்கு தொடரமுடியாது).. இருக்காத பின்னே.. இங்கு பதிக்கப்பட்ட ஒவ்வொரு கற்களும் உலகத்தின் பலதிசைகளிருந்து எடுத்து வரப்பட்டன.. ராஜஸ்தானிலிருந்து பளிங்கு கற்கள், சீனாவிலிருந்து நீலப்பச்சை கற்கள் மற்றும் படிகங்கள், அரேபியாவிலிருந்து இரத்தினக்கல், பஞ்சாபிலிருந்து சிலிகன் கற்கள், இலங்கையிலிருந்து நீலக்கல், மற்றும் ஆப்கனிஸ்தான், திபெத், ஐரோப்பாவிலிருந்துகூட சில பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
ஆனால் இவையெல்லாம் விட அந்த வெள்ளை மாளிகையில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. எவ்வளவு முறை திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் பார்த்திருந்தாலும், நேரில் பார்க்கும்போது தாஜ்மஹாலின் அழகிலும் நேர்த்தியிலும் லயித்துபோகாமல் இருக்கமுடியவில்லை. இதற்கு காதல் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கலாம்.. ஏனென்றால் முகலாய சாம்ராஜ்யத்திலும் சரி.. மற்ற சாம்ராஜ்ஜியகளிலும் சரி.. இன்று பாரம்பரிய இடங்களாக திகழ்பவை கோட்டைகளும் அரண்மனைகளும், சமாதிகளும் தான்.. கோட்டைகள் தங்கள் வெற்றியை நிலைநாட்டவும் தங்களின் பாதுகாப்புக்காகவும் கட்டப்பட்டவைகள்.. அரண்மனைகள் தான் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி என்பதை உலகுக்கு காட்டுவதற்காக கட்டப்பட்டவை.. பெறும் பொருட்செலவில் கட்டப்படும் சமாதிகளும் இதே காரணங்களுக்காகத்தான்.. ஆனால் தாஜ்மஹால் அன்பினால் காதலினால் ஈர்க்கப்பட்டு ரசித்துக் கட்டப்பட்டது.. அதனால்தான் அந்த மாளிகையில் 400 வருடங்கள் கடந்தும் இன்னும் ஒரு ஜீவன் இருப்பதை மறுக்கமுடியாது.
நாங்கள் சோமானியா பவனிலேயே பதிவு செய்துகொண்டு காலை 8 மணிக்கு கிளம்பினோம். ஒரு ஜீப்பில் கிளம்பி படகு காற்றடிக்கும் இடத்தை அடைந்தோம். எங்களுக்காக ஒரு பெரிய பலூன் படகு தயாராக இருந்தது. அதில் 8பேர் தாராளமாக அமர்ந்துகொள்ளலாம். சிலர் அந்த பலூன் படகை எடுத்து ஜீப்பின் மேல் போட்டார்கள்.. துடுப்புகளை ஜீப்பின் பின்னால் போட்டு விட்டு நம்மோடு ஏறிக்கொண்டார்கள். ஒரு அரைமணிநேரம் மலைமேல் பயணித்து பிரம்மபுரி (ரிஷிகேஷிலிருந்து 12 கி.மீ) என்ற இடத்தை அடைத்தோம். பிறகு ஒரு மலைச்சரிவில் இரண்டு பேர் படகைத் தூக்கிக்கொண்டு வர நாங்கள் துடுப்புகளை எடுத்துகொண்டு நடந்தோம்.. அதோ.. அழகிய கங்கை நங்கை மலைகளூடே ஆர்பரித்து வந்து கொண்டிருகிறாள். காலைக்கதிரில் கங்கை நதி தங்க நதியாக உருகி ஓடிவருவதை காணும்போது மனம் குதூகலித்தாலும், அதன் நடுவே பயணிக்க வேண்டும் என்றவுடன் லேசாக பயம் கவ்விக்கொண்டது. கரையை அடைந்ததும் அனைவரும் 'லைப் ஜாக்கெட்' மற்றும் தலைகவசம் அணிந்துகொண்டோம். படகை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு காலை எங்கு வைக்கவேண்டும், துடுப்பை எப்படி செலுத்தவேண்டும் என்கிற வழிமுறைகளை ஆங்கிலம் கலந்த இந்தியில் சொன்னார்கள். பிறகு நம் செல்போன், பர்ஸ், கேமிரா எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு ஒரு பையில் போட்டு பின்னால் வைத்து விடுகிறார்கள்.
எல்லோரும் படகில் உட்கார்துகொண்டு துடுப்பை கையில் பிடித்துகொண்டோம். 'ஹோய்' என்ற சத்தத்துடன் படகை இரண்டுபேர் தள்ளிவிட படகு கங்கையில் மிதக்கத் தொடங்கியது... கொஞ்சம் துடுப்பு போட்டவுடன் படகு வேகமாக நகரத்தொடங்கியது. தெளிவான குளிர்ந்த தண்ணீர் நம்மீது தூறல் போட்டுக்கொண்டே வந்தது.. மெதுவாக நகர்ந்து நகர்ந்து இப்போது நடு கங்கைக்கு வந்து விட்டோம். ஒரு இளைஞர் கூட்டம் நம்மை விட அதிவேகத்தில் படகை செலுத்திக்கொண்டு கைஅசைத்துக்கொண்டே விரைவாக கடந்து சென்றனர். நாங்கள் என்னவோ மெதுவாகத்தான் துடுப்பு போட்டுக்கொண்டிருந்தோம். நதியும் ஆர்பட்டமிலாமல் எங்களுடன் சமாதானமாக இருந்தது. 'அமைதியான நதியினிலே ஓடம்' என்று நான் பாட நினைத்ததுதான் தாமதம். அதுவரை அமைதியாக இருந்த நதி ஒரு வளைவு வந்ததும் தன் சீற்றத்தை மெல்ல ஆரம்பித்ததும் படகும் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரம்தான்... ஆர்பரித்துவரும் நதியலையில் மோதி படகு செங்குத்தாக மேலே ஏறி இறங்கியது.. அவ்வளவுதான்.. எங்களை கடந்து சென்ற ஒரு பேரலை எங்களை தொப்பலாக நனைத்து விட்டது. பின் 'அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்' என்று பாடினேன்.
அந்த வளைவைக் கடந்ததும் கங்கை கொஞ்சம் அமைதியானது.. 'வேண்டுமென்றால் நீங்கள் இறங்கலாம்' என்று சமிக்கை கொடுத்தார் படகுக்காரர். அருகிலிருந்த ஒருவர் 'தொப்' என்று நதியில் குதித்து படகிலிருந்த கயிறை பிடித்துக்கொண்டார்.. பின் படகின் பின்னால் நீந்திக்கொண்டே வந்தார்.. நானும் இறங்கலாமா என்று யோசிப்பதற்குள் 'நதியின் வேகம் கூடிவிட்டது.. படகில் ஏறுங்கள்' என்ற அறிவிப்பு வந்தது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு இடத்தில் சில பாறைகள் தெரிந்தன. கடல் அலைகள் சுவரில் மோதினால் ஏற்படுமே அதுபோல உயர அலைகள். படகு நிலைகொள்ளாமல் ஆடியது.. படகுக்காரர்கள் லாவகமாக படகை திசை திருப்பினார்கள். நாங்கள் கையில் துடுப்பை வைத்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். மீண்டும் ஒரு வளைவு.. அதே ரோலர் கோஸ்டர் பயணம்... இப்படி பல ரோலர் கோஸ்டர் பயணத்தில் எங்களுடன் மோதிய அலைகள் எங்களை சொட்ட சொட்ட நனைய வைத்துவிட்டது. செல்போன், கேமிராவை தனியாக எடுத்து வைத்ததன் அர்த்தம் புரிந்தது.
இப்போது நாங்கள் லக்ஷ்மன் ஜூலாவை கடந்து விட்டோம்.. நீரின் வேகம் குறைந்தவுடன் 'இறங்கலாம்' என்றார் படகுக்காரர். இந்தமுறை நான் தயாராகிவிட்டேன். கயிறை பிடித்துகொண்டு நடு கங்கையில் குதித்தேன். உடல் முழுவதும் ஜில் என்ற பரவசம்.. காலுக்கு அடியில் பல அடி ஆழம் இருக்கும் என்று தெரிந்தது (50௦அடியாம்). லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் ஜாலியாக மிதந்து கொண்டிருந்தேன். ஐந்து நிமிடம்தான்.. அச்சம், குளிர் எல்லாம் பறந்து விட்டது. இப்போது கயிறையும் விட்டு விட்டு ஆனதமாக நடு கங்கையில் நீந்திக்கொண்டிருந்தேன். படகை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி மிதக்கும் அளவுக்கு தைரியம் வந்தது. எப்படியும் மார்புக்கு மேலே தண்ணீர் போகாது என்கிற தைரியம்... அலுக்க சலிக்க கங்கையில் நீந்திவிட்டு பின் படகில் ஏறிக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்துக்குப் பிறகு கடைசியாக எங்களை நாங்கள் தங்கியிருந்த விடுதியின் பின்புறம் இறக்கி விட்டதுதான் பரவசத்தின் உச்சகட்டம்.![]() |
| சோமானி பவன் பின்புறம் |
![]() |
| லக்ஷ்மன் ஜுலா |
![]() |
| மங்கள ஆரத்தி |
![]() |
| காலை நேர கங்கை |
![]() |
| இசை நிகழ்ச்சி |
இரு மாடங்களுக்கும் இடையே சில அடி தூரம்தான்.. இருபக்கமும் இரும்பு வாயிற்கதவு... இங்கு காக்கி நிற உடையிலும் அங்கு கரும்பச்சை உடையிலும் எல்லையோர காவல் படையினர்... அந்த இடமே அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்திய நுழைவில் 'இந்தியா' என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டு மேலே மூவர்ணக்கொடி பறந்துகொண்டிருகிறது.. அந்தப்பக்கம் பாகிஸ்தான் கொடி..கூடவே ஜின்னாவின் படம். (இந்தியாவில் காந்தி படம் இல்லை..காந்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவானவர் என்று விட்டு விட்டார்களோ?).
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் இருபக்கமும் வாயிற்கதவின் முன் ஒரு பெறும் கூட்டம் நடனமாடிக்கொண்டிருகிறது, தங்கள் தேசியக் கொடியுடன்..! பல தேசபக்திப்பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன ('ஜெய் ஹோ'வும் உண்டு). நம் பக்கம் 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்', 'பாரத் மாதாகி ஜே', 'வந்தே மாதரம்' போன்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.. ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரி வேறு கையை உயர்த்தி 'இன்னும் இன்னும்' என்று கூட்டத்தை உசுப்பேத்திவிடுகிறார்.. இதேபோல பாகிஸ்தான் பக்கமும்...! இதெல்லாம் முடிந்தபிறகு நிகழ்ச்சி தொடங்கியது. இரண்டு
இரண்டு பேராக ராணுவ வீரர்கள் அதிவேகமாக நடந்து கதவு அருகே நின்று கொள்கிறார்கள். பிறகு சிலர் கிட்டத்தட்ட தலைக்குமேல் காலை உயர்த்தி சத்தத்துடன் தரையில் அடித்து நடந்து செல்கிறார்கள். இதற்கு இணையாக பாகிஸ்தான் பக்கமும் அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் வெடுக்கென தலையை திருப்பி கையை உயர்த்தி உடலை சிலிர்த்துக் கொள்கிறார்கள். அது என்ன ராணுவ சைகை என்று புரியவில்லை. பிறகு சடாரென்று கதவு திறக்கப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் வீரர்கள் ஏதோ போருக்கு தயாராவதுபோல நின்றுகொண்டு கைகுலுக்கிக்கொள்கிறார்கள். பிறகு சரியாக சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் இரு கொடிகளும் இறக்கப்டுகின்றன. பிறகு கதவு மீண்டும் வேகமாக மூடப்படுகிறது. அவ்வளவுதான்.. நிகழ்ச்சி முடிந்தது.